Sunday, August 16, 2009

தென் அப்ரிகாவில் விடுதலைபுலிகள் இலக்கை ராணுவம் அதிர்ச்சி

புலிகளை முற்றிலுமாக வோழித்து விட்டதாகவும் தமிழீழ போராட்டம் இனி தலை தூக்காது என இலங்கை ராணுவம் கூறிவரும் நிலையில் விடுதலை புலிகள் பலமிழந்துவிடவில்லை எனும் செய்தி இன்று வெளியாகி உள்ளது. விடுதலை புலிகளிடம் 15 க்கும் மேற்ப்பட்ட இலகுரக விமானக்கள் இருந்தது நாம் அனைவரும் அறிவோம், ஆணால் விடுதலை புலிகளுடனான கடைசி போரில் புலிகளை முற்றிலுமாக வோழித்துவிட்டதாக பிதற்றிக்கொண்ட இலங்கை அரசு அவர்களின் விமா வொடுதலைத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு விமானக்கள் என்ன ஆனது என்ற தகவலை கூரவேஇல்லை அவர்களின் பொய்பித்தலாட்டம் இன்று அனைவருக்கும் தெரிந்துவுள்ளது,

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக விமானங்கள் கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மலேசியாவில் இருந்து அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் செயலாளர் செல்வராஜா பத்மநாதனை, விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளேடான 'லங்காதீப' வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

"
எரித்திரியாவுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையேயான நெருங்கிய தொடர்புகள் பற்றிய தகவல்கள் கடந்த பல வருடங்களாகவே வெளியாகி வந்துள்ளன.இவ்வாறு எரித்திரியாவின் கடல் பகுதியில் புலிகள் அமைப்பின் கப்பல்கள் நிற்பதாகவும், எரித்திரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துவருவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி புலிகளுக்குச் சொந்தமான 10 சிறியரக விமானங்கள் எரித்திரியாவில் இருப்பதாகவும், இவை எரித்திரியாவின் வானூர்தி நிலையத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்த வானூர்திகளைப் பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய வானூர்தி நிலையத் தரப்பு மேற்கொண்டுவருவதாகவும், எரித்திய நாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் வர்த்தக நிறுனம் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாதுகாப்புப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணைகளில், எரித்திரிய வானூர்தி நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 10 வானூர்திகளும் முன்னர் வான்புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயனபடுத்திய சிலின் - 143 ரகத்தைச் சேர்ந்த விமானங்ககளே என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன்படி எரித்திரிய வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றே நிர்வகித்து வருகின்றது என்ற செய்தி சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகுந்த அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது.

இது தொடர்பான முழுமையான விசாரணைகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? : இலங்கை ராணுவத்தினர் அதிர்ச்சி

விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை அறிந்து இலங்னை ராணுவத்தினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கைப் போரில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள வன்னி மற்றும் யேலா காட்டுப்பகுதிகளில் புலிகள் சிலர் மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கொழும்பு பிரபாவை ராணுவம் கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், கொழும்பு வெள்ளவத்தையில் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு ராணுவம் விரைந்தது. ஆனால் அதற்குள்ளாக புலிகள் அங்கிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம், புலிகளின் உளவுப்பிரிவு, கொழும்பு நகரில் தொடர்ந்து பலம் மிக்கதாக செயல்பட்டுவருவது நிரூபணமாகி உள்ளது.
இதனிடையே, புலிகளின் வாக்கி டாக்கியை இலங்கை ராணுவத்தினர் அண்மையில் இடைமறித்துக் கேட்டபோது, ரகசிய மொழியில் பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது. இது பொட்டு அம்மானை அல்லது சொர்ணத்தைக் குறிக்கும் செய்தி என்பது ராணுவத்தினருக்கு தெரியவந்துள்ளதால், தற்போது அவர்கள் மிகவும் கலக்கத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.



லெமூரியா உண்மையா பொய்யா

தோழர்களே அது முற்று முழுதான உண்மையே ஏனென்றால் 1965 ஆம் ஆண்டு அமெரிக்க கப்பல் கடல் அரச்சியல் ஈடுபட்டபொழுதுதான் கடலுக்குள் மலைகள் இருப்பது தெரியவந்தது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது வுள்ள அனைத்து கண்டங்களும் ஒன்றாக இருந்தது என்பதை அனைதுஉலக புவியல் ஆய்வாளர்களின் கருத்து அவ்வகில் பார்த்தால் பொதிகைமலை கடலுக்கு அடியில் உள்ளது எனபது நம் அனைவரும் அறிந்ததே மற்றும் தென் அப்ரிக்காவில் வாழும் பழங்குடியினர் தங்கள் பட்டியை பாட்டி என்றே அழைக்கின்றனர் மற்றும் அவர்கள் வேட்டை ஆட பயன்படுத்தும் ஆயுதங்களும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய, தற்ப்பொழுது ஊட்டி போன்ற மலை பகுதியில் வாழும் மக்கள் பயன்படுத்தும் ஆயுதமும் ஒரே வகையாக உள்ளது, மற்றும் நமது பழங்குடினர் இசை ஆஸ்திரேலிய பழங்குடிஇனரும் ஒத்துபோகிறது எனவே லேமுரிய இருந்தது

உண்மையே! உண்மையே!! உண்மையே !!!

1 comment:

Anonymous said...

that is tru